Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலை பள்ளி அமைக்க வேண்டும்: அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

ராமநாதபுரம்.செப்.5: ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கூட்டத்தில் இருபாலர் படிக்கும் அளவில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டது. ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் அப்துல் நஜ்முதீன் முன்னிலை வகித்தார். மகளிர் துணைக் குழு அமைப்பாளர் வினோதினி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி வரவு செலவு கணக்குகளை வாசித்தார்.

இக்கூட்டத்தில் தீர்மானங்களை இயற்றப்பட்டது. அதன்படி ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் இருபாலரும் படிக்கும் வகையில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தவெக தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்தபடி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சி செயலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஓ.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தரப்படுத்தப்பட்ட ஊதிய உயர்வு முறையுடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஊதியமும், ஓய்வூதியமும் உள்ளிட்ட அனைத்து பயன்களையும் வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் வேலை நிறுத்தக் காலத்தை வரன்முறை செய்து 41 மாத ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும். பெரும்பாலான அரசு அலுவலகங்களில் உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளதால், பணியிடத்தினை நிரப்ப வேண்டும்.

கலெக்டர் தலைமையில் மக்கள் குறைத் தீர்க்கும் முகாம் நடத்துவதைப் போல அலுவலகப் பணியாளர்களின் ஏராளமான பிரச்சினைகளை சரி செய்திடும் வகையில் மாதந்தோறும் அலுவலகப் பணியாளர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும். கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் பணியாளர்கள் அதிகம் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து அலுவலகத்திலும் சுகாதாரமான, சுத்தமான கழிப்பறை வசதியும் மற்றும் ஓய்வு அறையும் ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் இயற்றப்பட்டது. மாவட்ட துணை தலைவர் பாலுச்சாமி நன்றி கூறினார்.