Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஓய்வு நீதிபதி ஆய்வு

ராமநாதபுரம், செப்.5: ராமநாதபுரம், கமுதி, கடலாடி வட்டங்களில் உள்ள கண்மாய்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உயர்நீதிமன்றற வழிகாட்டுதலின்படி சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் ஆய்வு செய்து வருகிறார். இதன் அடிப்படையில் ராமநாதபுரம் பெரிய கண்மாய், கமுதி ஊராட்சி ஒன்றியம், கோவிலாங்குளம் ஊராட்சியில் உள்ள ஆரைகுடி கண்மாயில் 27.17 ஹெக்டேர் பரப்பளவிலும், எருமைக்குளம் ஊராட்சியில் உள்ள கரிசல்புளி கண்மாயில் 24.72 ஹெக்டேர் பரப்பளவிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் கடலாடி ஊராட்சி ஒன்றியம், எஸ்.தரைக்குடி ஊராட்சியில் உள்ள தரைக்குடி கண்மாயில் 194.1 ஹெக்டேர் பரப்பளவிலும், மேலக்கிடாரம் ஊராட்சியில் உள்ள திலக்கல் கண்மாயில் 5.75 ஹெக்டேர் பரப்பளவிலும், மேலக்கிடாரம் கண்மாயில் 8.36 ஹெக்டேர் பரப்பளவிலும் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை விரைந்து அகற்ற வேண்டும் எனவும், அடுத்த முறை ஆய்வுக்கு வருவதற்குள் அனைத்து சீமைக் கருவேல மரங்களையும் முழுமையாக அகற்ற வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

இதேபோல, தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு அலுவலகங்கள் மூலம் உடனடியாக அறிவிப்பு பிரசுரங்களை வழங்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம், உதவி இயக்குநர் பத்மநாபன், கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேகராஜன், சந்திரசேகரன், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், சங்கரபாண்டியன் அரசு அலுவலர்கள், வருவாய்த் துறைற அதிகாரிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.