Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆக்கிரமிப்பு அகற்றுவதை கைவிட்டு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்: கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

ராமநாதபுரம், ஆக.4: ஒப்பிலான் கிராமத்தில் வனத்துறை பகுதியில், சாலையோரம் 60 வருடங்களுக்கு மேலாக குடியிருக்கும் பொதுமக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என முஸ்லீம் ஜமாத்தார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் சிவகுருபிரபாகரனிடம், ஒப்பிலான் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் வீட்டு மனை பட்ட வழங்கக்கோரி மனு அளிக்க வந்தனர்.

இது குறித்து ஒப்பிலான் கிராமமக்கள் கூறும்போது, கடலாடி ஒன்றியம், கடற்கரை கிராமமான ஒப்பிலானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் கடல்தொழில், வியாபாரம் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். பெண்கள் பெரும்பாலும் 125 நாள் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்களில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாயல்குடி, வாலிநோக்கம் செல்லும் கடற்கரை சாலையோரம் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். இதில் சிலருக்கு வீட்டு மனை பட்டா உள்ளது. பெரும்பாலனோருக்கு பட்டா இல்லை. மேலும் வீடுகளுக்கு பின்புறம் உள்ள இடங்கள் வனத்துறைக்கு சொந்தமான காப்புகாடு இடங்கள் ஆகும். இதனால் வனத்துறை அதிகாரிகள், வனத்துறை சொந்தமான இடம் எனக் கூறி வருகின்றனர், எனவே வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களிலிருந்து காலிசெய்ய வலியுறுத்தி வருகின்றனர். காலி செய்யவில்லை என்றால் ஆக.14ம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகள் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பு என்பதை கைவிட்டு, 60 ஆண்டுகளாக குடியிருந்து வருவோருக்கு வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.