Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கடையில் திருடிய வாலிபர் கைது

சிங்கம்புணரி, ஆக.3: சிங்கம்புணரி பேருந்து நிலையம் பகுதியில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு சிப்ஸ் கடையின் பூட்டை உடைத்து 40 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது. இது தொடர்பாக சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடையின் பூட்டை உடைத்த நபரின் கைரேகையை கொண்டு போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.

இதில் திண்டுக்கல் மாவட்டம் பழநி சின்ன காளையார் புதூர் பகுதியை சேர்ந்த பாண்டி மகன் மகுடீஸ்வரன் (38) என்பவரை கைது செய்தனர். இவர் மீது பத்துக்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது.