Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாட்டுவண்டி பந்தயம்: 5 பேர் மீது வழக்கு

திருப்புத்தூர், ஆக.3: திருப்புத்தூர் அருகே காட்டாம்பூர் பாண்டி முனியய்யா கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் சிவகங்கை, சிங்கம்புணரி, மதுரை, புதுக்கோட்டை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாட்டு பிரிவுக்கு 7 கிலோ மீட்டர் தூரமும், சிறிய மாட்டு பிரிவுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும், பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பெரிய மாட்டு பிரிவில் 16 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு பிரிவில் 22 ஜோடி மாடுகளும் என மொத்தம் 38 ஜோடிகள் கலந்து கொண்டது. இந்நிலையில், அரசு அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக காட்டம்பூர் கிராம நிர்வாக அலுவலர் வாசுகி கொடுத்த புகாரின் பேரில், திருக்கோஷ்டியூர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சுந்தரவடிவு காட்டாம்பூர் மற்றும் செளமிய நாராயணபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம், ராமசாமி, முத்துக்குமார், பொன்னுச்சாமி, பாண்டியன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.