காளையார்கோவில், அக்.2: காளையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் உதயகுமார் வரவேற்று பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் லதா தலைமை தாங்கினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்பு மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக் கூறினர். இந்த நிகழ்வில் சிவகங்கை மாவட்ட தொடர்பு அலுவலர் சக்திவேல் முருகன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


