Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த அறிவுறுத்தல்

சிவகங்கை, அக். 2: அதிக மகசூல், கூடுதல் லாபம் பெற்றிட சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கை விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி சிறுதானிய பயிர்களை பயிரிட்டு அதிக லாபம் பெறலாம். நல்ல தரமான சான்று பெற்ற விதைகளையே விதைக்க வேண்டும்.

சான்று பெற்ற விதைகளை விதைப்பதனால் விவசாயிகளுக்கு 30 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. சான்று பெற்ற விதைகளில் அதிகப்படியான முளைப்புத்திறன் இருப்பதால் வயலில் பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம். பயிரின் வளர்ச்சி ஒரே சீராக இருக்கும். ஒரே நேரத்தில் பூக்க ஆரம்பிக்கும். ஒரே நேரத்தில் அறுவடை செய்யலாம். கலப்படமில்லாத விதையை உற்பத்தி செய்யலாம். கலப்பிடமில்லாத விதையால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது.