Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அங்கன்வாடி மையம் அருகே ஆபத்தான பாழடைந்த கட்டிடம்: உடனே அகற்ற மக்கள் வேண்டுகோள்

மானாமதுரை, ஆக.1: மானாமதுரை அருகே அரிமண்டபம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் அருகே இடியும் நிலையில் உள்ள பாழடைந்த கட்டிடத்தை அகற்ற கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை ஒன்றியம் மேலப்பசலை ஊராட்சிக்குட்பட்ட அரிமண்டபம் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை கட்டிடம் இருந்தது. பராமரிப்பு இல்லாத நிலையில் இக்கட்டிடம் சேதமடைந்ததை தொடர்ந்து புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. அதன்பின் மேலும் பல ஆண்டுகள் கடந்த நிலையில் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் செடிகள் வளர்ந்து கட்டிடம் முழுமையாக விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.