Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ரவுடி கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

திருப்புவனம், ஆக.1: திருப்பாச்சேத்தி அருகே, மாத்தூரைச் சேர்ந்தவர் ஊர்க்காவலன் (32). இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் கஞ்சா வழக்கு, கொடிய ஆயுதம் வைத்திருந்தது உட்பட 33க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.சமீபத்தில் கடலூர் சிறையிலிருந்து ஜாமீனில் வந்த ஊர்க்காவலன், நேற்று முன்தினம் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென காரில் வந்த 5 பேர் கும்பல், வெட்டி படுகொலை செய்தது.

திருப்பாச்சேத்தி போலீசார், உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.நேற்று காலை ஊர்க்காவலனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், ஊர்க்காவலன் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க டிஎஸ்பி ஜஸ்டின் பிரபாகரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.