Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுக்கோட்டை மாவட்ட அரசுபள்ளியில் செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம்

புதுக்கோட்டை,மே 23: புதுக்கோட்டை மாவட்டத்தில் செவித்திறன் குறையுடையோருக்கன அரசு உயர்நிலை பள்ளியில் இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என மாவட்ட கலெக்டர் அருணா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் விடுதியுடன் கூடிய செவிதிறன் குறையுடையோருக்கன அரசு உயர்நிலை பள்ளியானது தமிழ் நாடு அரசால் நடத்தப்பட்டுவருகிறது. மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி பயின்ற சிறப்பாசிரியர்கள் மூலமாக சிறப்பான கல்வி, தரமான உணவு, சீருடை, அதிநவின தொழில்நுட்ப கருவி, கணிணி ஆய்வகம், சிறந்த கல்வி உபகரணம் மூலம் கற்றல் கற்பித்தல், ஆண்டுக்கு ஒருமுறை கல்வி சுற்றுலா, சிறப்பு கல்வி உதவித்தொகை என அனைத்தும் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களை உரிய பாதுகாப்புடன் பார்த்துகொள்ள விடுதியில் துணை விடுதி காப்பாளர், சமையலர், ஆயாக்கள், இரவு காவலர்,ஆகிய பணியாளர்கள் உள்ளனர்.