Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மண்ணவேளாம்பட்டி அரசுபள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி: பொதுமக்கள் பாராட்டு

இலுப்பூர்,மே 22: அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். அன்னவாசல் அருகே உள்ள முன்னவேலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 40 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி அடைந்தனர். இது இப்பள்ளியின் 100 சதவீத தேர்ச்சி ஆகும். பள்ளியில் பயின்ற கௌதம் 484 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், சசிநாதன் 478 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், சர்மிளா 455 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர். முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியர் இளஞ்சேகரன், கிராம கல்விக் குழுத் தலைவர் பழனிக்கண்ணு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணகாந்தி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அகிலா ஆகியோர் பாராட்டினர். 100% தேர்ச்சி பெற பாடுபட்ட ஆசிரிய, ஆசிரியர்களை ஊர் பொதுமக்கள் நன்றியும் பாராட்டையும் தெரிவித்தனர்.