Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, மே 19: புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,அரசு இசைப்பள்ளியில் நிகழ்வாண்டுக்கான இருபாலர் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க 7ம் வகுப்பு தேர்ச்சியும் நாதசுரம், தவில், தேவாரம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க எழுதப் படிக்கத் தெரிந்திருக்கவும் வேண்டும். 12 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்காலம் 3 ஆண்டுகள். பயிற்சி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை. பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.350,-மட்டும்.