Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

துவார் ஊராட்சியில்; காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்

கந்தர்வகோட்டை, நவ.3: துவார் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் துவார் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் (வட்டாரவளர்ச்சி) சீனிவாசன் கிராம ஊராட்சிகள், ஆகியோர் வழிகாட்டுதலின்படி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி சந்திரன் ,குமார், முருகானந்தம் ,முருகராஜ் முன்னிலையில் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளின் நடைபெற்றது.

இதில் துவார் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை பற்றிய அறிக்கையையும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்தும், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் பற்றியும், இழிவு தரும் ஜாதிப் பெயர்களை மாற்றம் செய்தல் பற்றியும் மற்றும் பல்வேறு கருப்பொருள் கொண்டு விவாதம் தகுந்த நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் ஊராட்சி செயலாளர் வீரையன் நன்றி கூறினார். கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்