காலி மதுபாட்டில்களை ஸ்கேன் செய்யும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி; டாஸ்மாக் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டை, நவ. 2: புதுக்கோட்டையில் டாஸ்மாக் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.காலி மதுபாட்டில்களை ஸ்கேன் செய்து பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டையில் டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபாட்டில்கள் ஸ்கேன் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பெறப்படும் காலி மதுபாட்டில்களையும் ஸ்கேன் செய்ய வேண்டுமென்ற திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதைக் கண்டித்தும், இந்தத் திட்டத்தை உடனே கைவிட வலியுறுத்தியும், புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் அருகில் டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


