Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆவுடையார்கோவில் பகுதியில் தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி

அறந்தாங்கி, ஜூலை 14: ஆவுடையார்கோவில் பகுதியில் அடிக்கடி தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி மின் நிறுத்தப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நாள்தோறும் ஆவுடையார்கோவில் பகுதியில் 2 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் உள்ளது.

இரவு பகல் என எந்த நேரத்திலும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. குறைந்தது 5 முறையாவது மின்சாரம் இந்த பகுதியில் நிறுத்தப்படுகிறது. இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பள்ளி குழந்தைகள், முதியவர்கள் கர்பிணிகள் பெரியதும் அவதிப்படுகின்றனர். இதேபோல் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் ஆவுடையார்கோவில் பகுதி வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாக வருகின்றனர். வர்தகம் பாதிகப்படுவதாக கூறுகின்றனர்.

இதனால் சம்மந்தப்பட்ட துறையினர் ஆவுடையார்கோவில் பகுதியில் அடிக்கடி மின்சாரம் நிறுத்துவதை சரி செய்வது தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவுடையார்கோவில் சுற்றுவட்டார பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.