கந்தர்வகோட்டை, அக். 30: கந்தர்வகோட்டையில் எலும்மிச்சைபழம் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதி விவசாயிகள் அவரவர் தோட்டத்திலும், வீடுகளிலும் எலும்மிச்சை மரம் வைத்து பாராமரிக்கின்றனர். மரத்தில் காய்க்கும் எலுமிச்சைபழம் மகசூலை சேகரித்து விற்பனை செய்து பணம் ஈட்டி வருவது வழக்கம்.
கடந்த மாதம் அதிகளவில் காய்ப்பு இருந்ததால் எலும்மிச்சைபழம் விலை மிகவும் குறைந்தே இருந்தது. தற்சமயம் வட கிழக்கு பருவமழை இருப்பதலும் காய்ப்பு குறைந்ததாலும் மக்கள் தேவைக்கு ஏற்ப எலும்மிச்சை பழத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. உள்ளூர் காய்ப்பு குறைந்ததாலும் வெளியூர்வரத்து குறைந்ததாலும் எலும்மிச்சைபழம் கிலோ ரூ.200 வரை விற்பனையாகிறது.


