அறந்தாங்கி, அக்.30: மீமிசல் பஸ் ஸ்டாண்டு அருகே இசிஆர் சாலையில் உள்ள குண்டு குழியுமாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் பஸ் ஸ்டாண்டு அருகே மீமிசலில் இருந்து கோட்டைப்பட்டினம், மணமேல்குடி கட்டுமாவடி வழியாக நாகப்பட்டினம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான அனைத்து விதமான வாகனங்களும் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது.
இப்படி முக்கியமான சாலையாக உள்ள இசிஆர் சாலையில் மீமிசல் பஸ் ஸ்டாண்டு அருகே குண்டும் குழியுமாக சாலை உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் பள்ளம் மேடு ஏற்றி இறக்கும் போது கனரக வாகனங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதுடன் வாகனங்களும்பழுதடைகிறது. அவ்வப்போது மழை பெய்து வருவதால் மழை நீர் பள்ளத்தில் தேங்கி விடுகிறது. இதனால் பைக்கில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழும் அவல நிலை ஏற்படுகிறது. இதனால் மீமிசல் பஸ் ஸ்டாண்டு அருகே இசிஆர் சாலையில் உள்ள பழுதடை சீரமைக்கவேண்டுமென வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


