Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பொன்னமராவதி அருகே அம்மாநகர் சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

பொன்னமராவதி, அக். 30: பொன்னமராவதி அருகே அம்மாநகர் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி அருகே இந்திராநகர் பள்ளிவாசலில் இருந்து ஈஸ்வரமூர்த்தி குளம் வழியாக அம்மாநகர், சிவசக்திநகர், செங்கடப்பொட்டல் சாலை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தார்சாலை போடப்பட்டது.

தற்போது இந்த சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் ,குழியுமாக போக்குவரத்துக்கு செல்ல முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் நகர் பகுதிகளுக்கு செல்லும் இந்த குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து புதிதாக தார் சாலை போடவேண்டும் என பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையர் பாலசுப்பிரமணியிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.