Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

பொன்பேத்தி வருவாய் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்று நடும் விழா

அறந்தாங்கி, அக். 29: அறந்தாங்கி வருவாய் துறை சார்பாக பொன்பேத்தி வருவாய் கிராமத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா பொன்பேத்தி வருவாய் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா அறியுறுத்தலின் படி அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அபிநயா தலைமையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பல்வேறு வகை மரக்கன்றுகள் 4 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட உள்ளன. இதையடுத்து நேற்று மரகன்று நட்டு மரகன்று விழாவை வருவாய் துறையினர். தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் துணை வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் பொன்பேத்தி அரசினர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஊர் பெரியவர்கள் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்தனர்.