Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அறந்தாங்கி அரசு மாதிரி பள்ளியில் மின்னணு கழிவு சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அறந்தாங்கி, அக். 29: அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் மின்னணு கழிவு சேகரிப்பு மற்றும் முறையான அகற்றம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழச்சியில், ஈரக்ழிவு,உலர்கழிவு,மருத்துவ கழிவு, மின்னணு கழிவு போன்றவை பற்றியும் அதனை எவ்வாறு தரம் பிரித்து அளிப்பது பற்றியும மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

சுற்றுச்சூழல் குறித்து மின்னணு கழிவு சார்ந்தும் அதை எவ்வாறு சேகரித்து அகற்றுவது சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மின்னணு கழிவு சார்ந்த வினாடி வினா நடத்தப்பட்டு விடை அளித்த மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறந்தாங்கி சுகாதார அலுவலர் கருப்புசாமி, பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமரைசெல்வன், நகராட்சி பனியாளர்கள் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.