அறந்தாங்கி, அக். 29: அறந்தாங்கி அருகே நாகுடியில் தடைசெய்யப்பட்ட போதை பொருள் வைத்து இருந்த 3 பேரை போலீசார் கைது செய்து 105 கிலோ ஹான்ஸ் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஹான்ஸ் குட்கா தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை காவல்துறை கைது செய்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி அருகே நாகுடி பகுதியில் கடைகளில் ஹான்ஸ் போதைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலின்படி அறந்தாங்கி துணை கண்காணிப்பாளர் சார்லஸ் தனிப்படை அமைத்து நாகுடி கடைவீதி பகுதியில் உள்ள மளிகை கடைகளில் சோதனை செய்தபோது ராஜேந்திரன்(56) ரகுமான் (57) மாணிக்கம்(46) ஆகியோரிடம் இருந்து சுமார் 105- கிலோ ஹான்ஸ் கூல்லிப் இருந்தது தெரிவந்தது இதையடுத்து பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து நாகுடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement


