Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கறம்பக்குடி அருகே மணல் அள்ளிவந்த மாட்டு வண்டி பறிமுதல்: இருவர் தப்பி ஓட்டம்

கறம்பக்குடி, ஆக.29: திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய இரண்டு மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளப்படுவதாக கறம்பக்குடி காவல்துறைக்கு வந்த தகவல் வந்தது. இதையடுத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது முள்ளங்குறிச்சி சாந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி (35), செல்வராஜ் (41) ஆகிய இருவரும் அவர்களது மாட்டு வண்டிகளில் அக்னி ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டு வந்த போது திருமணஞ்சேரி இலைகளை விடுதி சாலையில் போலீசாரை கண்ட உடன் இருவரும் மாட்டு வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடிவருகின்றனர்.