கரம்பக்குடி, ஆக.29: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நெய்வேலி வடக்கு தெரு தங்கப்பா இவரது மனைவி ருக்மணி ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தங்கப்பா ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மகன் தீனதயாளன் மழையூர் அரசுபள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்து நீட் தேர்வில் பங்கேற்று 527 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இவர் 7.5% இட ஒதுக்கீட்டில் நேர்காணலில் கலந்து கொண்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளார். விடாமுயற்சியும், உழைப்பும், குடும்பத்தின் ஆதரவும் இருந்தால் எந்தவொரு பெரிய இலக்கையும் எட்ட முடியும் என்பதற்கு இந்த மாணவர் ஒரு எடுத்துகாட்டு உள்ளார். மருத்துவ படிப்பில் இடம் கிடைந்த மாணவன் தீனதயாளனை மழையூர் அரசு பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாரட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.



