இலுப்பூர், ஆக. 28: அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் டேக்வாண்டோ தற்காப்புக்கலைப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல் நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் முகமதுசரீப், கிஷோர், முகமதுபாவா, குகன் ஆகியோர் மாவட்ட அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ தற்காப்புக்கலை போட்டியில் பங்கு பெற்று முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.
இவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் இதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் சரவணன் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜநாரயணன், உதவி தலைமை ஆசிரியர் வீரப்பன், பள்ளி மேலாண்மை குழுதலைவர் சகிலா சாதிக் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர். பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் பதக்கங்கள் வழங்கப்பட்டது.



