Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கறம்பக்குடி அருகே சேதமடைந்த தார்சாலை சீரமைக்க வேண்டும்

கறம்பக்குடி, ஆக. 28: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெள்ளாள விடுதி ஊராட்சி வலங்கொண்டான் விடுதி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த வெள்ளாள விடுதி கிராமத்தில் தார்சாலை அமைத்து செயல்பட்டு வந்தது. தற்போது தார் சாலையானது பழுதடைந்து பராமரிபின்றி எந்த நேரத்திலும் சாலையில் செல்வோரை ஆபத்தை ஏற்படுத்தும் என அச்சத்தில் உள்ளனர்.

எனவே பல ஆண்டுகளாக பழுதடைந்து பராமரிபின்றி போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் உள்ள வெள்ளாள விடுதி சாலையை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறிப்பு ஏராளமான ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் அடிப்படை வசதிகள் எதுவுமே நிறைவேற்றபடாமல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உள்ளது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விரைவில் நவடடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.