Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திமுக சார்பில் திருக்களம்பூரில் இலவச மருத்துவ முகாம்

பொன்னமராவதி,டிச.27: பொன்னமராவதி அருகே திருக்களம்பூரில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் மாநில மருத்துவரணி இணைச்செயலாளர் அண்ணாமலை முன்னிலையில் திருமயம் சட்டமன்ற தொகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் ஊராட்சியில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சித்தலைவர் மணி, தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிர்வாகி ஆலவயல் முரளிசுப்பையா மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உட்படபலர் கலந்து கொண்டனர்.