திருமயம், ஆக. 26: திருமயத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை 21ம்தேதி நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (27ம்தேதி) காலை 11 மணி அளவில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் திருமயம் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான குறைகளை மனுவாகவோ, நேரடியாகவோ தெரிவிக்கலாம்.
கூட்டத்தில் புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயனடைய வேண்டும் என திருமயம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தாய் தெரிவித்துள்ளார்.




