பொன்னமராவதி, ஆக. 26: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து சாலைப்பணியாளர்கள் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்பு 25க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் ஒன்றியத்தில் உள்ள சாலை ஓரம், பள்ளம் படுகுழிகளை சீர் செய்தும் வந்தனர். இவர்கள் படிப்படியாக பணி ஓய்வு பெற்ற பின்னர் இந்த பணியிடங்கள் நிரப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஒன்றியச்சாலை மற்றும் சாலை ஓரம் மீண்டும் செடி, கொடிகள், குப்பகைள் அப்புறப்படுத்த ஆள் இல்லாமல் 100 நாள் பணியாளர்கள் மூலம் ஒரு சில இடத்தில் சீர் செய்யப்பட்டது. இப்போது அதுவும் செய்வதில்லை எனவே பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள ஒன்றியச்சாலைப்பணிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.




