கறம்பக்குடி, அக். 23: கறம்பக்குடி அருகே விவசாயி வீட்டில் விஷப்பாம்பு மீட்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். விவசாயி. இவரது வீட்டின் அருகே விஷப்பாம்பு புகுந்து விட்டதாக உறவினர்கள் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு பாபில்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் அருகே பதுங்கி பயமுறுத்திய விஷப்பாம்பை உயிருடன் மீட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டு விட்டனர். இதனால் இப்குதியில் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.


