Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வயல்வெளிகளை செம்மைப்படுத்தி விவசாயிகள் நடவு பணி தீவிரம்

இலுப்பூர், அக். 23: இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் நடவுப் பணிகளை ஆர்வமாக செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பகுதிகளில் மழை பெய்தது. செப்டம்பர் மாதம் என்பது வேளாண்மையில் மிக முக்கியமான ஒரு மாதமாகும். இக்காலம் காரீப் பருவத்தின் அறுவடை காலமாகவும், ரபி பருவத்திற்கான ஆரம்ப கட்டத்காலமாகவும் கருதப்படுகிறது.

சம்பா பருவம் என்பது ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் விவசாய பணிகளை துவக்கி நடவு செய்து ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் அறுவடை செய்யப்படும் காலமாகும். கடந்த செப்டம்பர் மாதத்தில் இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பகுதியில் ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பெய்தது.

இதையடுத்து வயல் வெளிகளை உழவு செய்து செம்மைப்படுத்திய கிணற்றுப் பாசன வசதி உள்ள விவசாயிகள் நாற்று நடவு பணிகளை மேற்கொண்டனர். தற்பொழுது இரண்டு தினங்களாக பருவ மழை பெய்து வரும் நிலையில் மேலும் தொடர்ந்து மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் வயல்வெளிகளை செம்மை படுத்தி விவசாயிகள் நடவு பணிகளை ஆர்வமாக மேற்கொண்டு வருகின்றனர்.