பொன்னமராவதி, அக். 23: பொன்னமராவதி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உடையாம்பட்டியைச் சேர்ந்தவர் பழனியாண்டி. மனைவி சுப்பம்மாள் இருரும், மேலத்தானியத்தில் துக்கத்திற்கு சென்றனர். அப்போது தனது மனைவியை துக்க வீட்டில் விட்டு விட்டு கடைவீதிக்கு பழனியாண்டி மட்டும் சென்றார். துக்க வீட்டில் அமைக்கப்பட்டிருந்த தகர பந்தல் இரும்பு தூணில் மின் கசிவு ஏற்பட்டு சுப்பம்மாள் தூக்கி வீசப்பட்டு மயக்க நிலையில் கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் மேலத்தானியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சுப்பம்மாள் இறந்து விட்டார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குபதிவு செய்து சுப்பம்மாள் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


