Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

காலமுறை ஊதியம் வழங்க கோரி சத்துணவு பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்

புதுக்கோட்டை, ஜன. 21: சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போ ராட்டத்தில் ஈடுபட்ட 550 தமிழ்நாடு சத்துணவு ஊழிய ர்கள் கைது செய்யப்பட்டனர். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ஐந்து லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு மூன்று லட்சம் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியு றுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் பலகட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 550 சத்துணவு ஊழியர்களை கைது செய்தனர்.