Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

இலுப்பூரில் இருந்து பழனிக்கு 200க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பாதயாத்திரை

இலுப்பூர், ஜன. 21: இலுப்பூரில் இருந்து 200க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் மாலை அணிந்து, பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். இலுப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பல ஆண்டுகளாக சித்தி முத்தி விநாயகர் திருப்புகழ் வார வழிபாட்டு சபை சார்பில் மாலை அணிந்த முருக பக்தர்கள் பழனிக்கு பாத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 47ம் ஆண்டு பாத யாத்திரை நேற்று மேற்கொண்டனர். இதையொட்டி நேற்று இலுப்பூர் ரெட்டை பிள்ளையார் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை அணிந்த 200க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் இலுப்பூர் முக்கிய தேரோடும் வீதி வழியே வலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு விராலிமலை, மணப்பாறை, வண்டி கருப்பர் கோயில், எரியோடு, சுள்ளறும்பு வழியே பழனி சென்று மலையை வலம் வந்து மலைமேல் சென்று முருகருக்கு சிறப்பு வழிபாடு நடத்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சித்தி முத்தி விநாயகர் திருப்புகழ் வார வழிபாட்டு சபையினர் செய்திருந்தனர்.