அறந்தாங்கி, செப்.18: புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்கு அம்மாபட்டினம் கிளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நேற்று தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் முகமது மீரான் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கிளை தலைவர் அமீர் அப்பாஸ், பொருளாளர் சாகுல் அமீது, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரத்ததான முகாமில் ஆர்வத்துடன் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். மருத்துவத் தகுதி அடிப்படையில் 25 யூனிட் ரத்தங்கள் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் தன்வர்ஷ் ராஜு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மாவட்ட துணை செயலாளர் சைபுல் கரீம் நன்றி கூறினார்.


