Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆவுடையார்கோவில் அருகே மின்னல் தாக்கி மூதாட்டி பலி

அறந்தாங்கி, செப். 18: ஆவுடையார்கோவில் அருகே மின்னல் தாக்கி மூதாட்டி பலி வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே நெட்டியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகன் மனைவி பொற்கொடி(60). இவர் நேற்று வீட்டில் வளர்த்து வரும் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு வயல் பகுதியிக்கு ஓட்டி சென்று உள்ளார். அப்போது வானம் கருமேகங்களுடன் லேசான மழை பெய்துள்ளது.

அப்போது பொற்கொடியை மின்னல் தாக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற ஆவு டையார்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி அறந்தாங்கி மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் வருவாய்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி மூதாட்டி இறந்த சம்பவத்தால் ஆவுடையார்கோவில் பகுதியில் சோகத்ைத ஏற்படுத்தி உள்ளது.