Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புதுக்கோட்டையில் பெரியார் பிறந்த நாள் விழா உருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

புதுக்கோட்டை.செப்.18: புதுக்கோட்டையில் திமுக சார்பில் பெரியாரின் 148 வதுபிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரியார் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பெண்களின் விடுதலைக்காக சாகும் வரை போராடிய தந்தை பெரியார் பிறந்த நாளை நேற்று தமிழகத்தில் உள்ள பெரியார் சிந்தனை வாதிகள் கொண்டாடினர். இதன் அடிப்படையில் புதுக்கோட்டையில் திமுக சார்பில் தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதற்காக புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகம் எதிரே பெரியார் திருவுருவப்படம் வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பெரியாரின் உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது. திமுக மாவட்ட செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் எம்எல்ஏ முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏ கவிதை பித்தன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.