Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஏனாதி அரசு பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பொன்னமராவதி, ஜூலை 17: பொன்னமராவதி அருகே ஏனாதி அரசு பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் மருத்துவர் அழகேசன் தலைமை வகித்தார். காமராஜரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாணவர்களுக்கு பரிசும், கைக்குட்டை வழங்கப்பட்டது. இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்க பொருளாளர் ஆறுமுகம், முன்னாள் தலைவர் ரமேஷ், முன்னாள் செயலாளர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.