Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பொன்னமராவதி சாத்தனூரில் ஆங்கில கல்வி குறித்த விழிப்புணர்வு பேரணி

பொன்னமராவதி, ஜூலை 18: பொன்னமராவதி அருகே சாத்தனூரில் ஆங்கில கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அரசமலை ஊராட்சி சாத்தனூர் அமல அன்னை பப்ளிக் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் மரியபுஷ்பம் தலைமை வகித்தார். பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அரசமலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார். மேலும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு இன்றைய கல்வியின் ஆங்கிலத்தில் அவசியத்தை உணர்த்தும் விதமாக பள்ளி மாணவர்களால விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை அரசமலை கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதில் அருட்சகோதரிகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்குபெற்ற பேரணி முக்கிய வீதி வழியாக சென்று வந்தது.