Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காரையூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

பொன்னமராவதி, மே 18: காரையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பூத்தட்டு எடுத்து அம்மனுக்கு சாற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா காரையூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழாவான பூச்சொரிதல் திருவிழா நடைபெற்றது.பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.

இந்த பூச்சொரிதல் விழாவில் காரையூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மனை முக்கிய வீதியின் வழியாக வான வேடிக்கையுடன் பூத்தட்டுகள் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து வருகின்ற மே 24 பொங்கல் மற்றும் பால்குடம் விழாவும், மே -25 விழாவின் முக்கிய விழாவான தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் போலீசார் செய்திருந்தனர்.