Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆவுடையார்கோவில் அருகே பழுதடைந்த மின்கம்பம் மக்கள் அச்சம்

அறந்தாங்கி, மே 18: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் உள்ள பிரதான சாலைகளின் ஓரத்தில் உள்ள மின்மாற்றி கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து உட்புறம் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையும், மின்கம்பத்தின் அடிபகுதி பலவீனமடைந்து எந்த நேரத்திலும் மின்மாற்றி கம்பம் கீழே விழும் நிலையில் உள்ளது.

தற்போது அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து வருவதால் அசபாவிதம் ஏதும் நடக்கும் முன் சம்மந்தப்பட்ட துறையினர் சேதமான மின்மாற்றி கம்பத்தை மாற்ற வேண்டும் என கோபாலபட்டிணம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.