பொன்னமராவதி,அக்.17: பொன்னமராவதி அருகே உள்ள வார்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி புதுக்கோட்டை நடைபெற்றது. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவிகள் பிரிவு கபாடி போட்டியில் வார்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்னர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நற்சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் சுப்பையா, உடற்கல்வி ஆசிரியர் பழனிச்சாமி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர்.


