கறம்பக்குடி, அக்.17: கறம்பக்குடி அருகே அக்னி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டியை பறிமுதல் செய்த காவல்துறையினர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அனுமதியின்றி அக்னி ஆற்றில் மணல் அள்ளுவதாக கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இந்த தகவலை அடுத்து காவல்துறை எஸ்ஐ சிற்றரசன் தலைமையில் காவல்துறையினர் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டினர்.
அப்போது புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (28) என்பவர் அக்னி ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டு வரும்போது வழிமறித்து போலீசார் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிவந்த மாட்டு வண்டி, மணலையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்த கறம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


