புதுக்கோட்டை, அக். 16: புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மின்வாரிய அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை திரும்ப பெற வேண்டும், பிபிபி முறையில் தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், ஒப்பந்த வேலை வாய்ப்பை திரும்ப பெற வேண்டும்,
வாரிய ஆணை எண் 2ஐ ரத்து செய்திட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்சார தொழிலாளர் பிரகாஷ் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


