Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பொன்னமராவதியில் கல்லூரி மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்

பொன்னமராவதி, அக். 16: பொன்னமராவதி வேளாண் கல்லூரி மாணவிகளுடன் புதுகை மாவட்ட கலெக்டர் அருணா கலந்துரையாடல் செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகளின் தங்களின் கிராம தங்கல் திட்டத்தின் கிழ் பொன்னமராவதியில் தங்கியுள்ள மாணவிகள் மாவட்ட கலெக்டர் அருணா அவர்களை சந்தித்து தங்களின் இறுதியாண்டு கல்விப்பயணங்கள் பற்றியும் வேளாண் கல்வி குறித்தும் களப்பயணம் குறித்து கலந்துரையாடினர்.

அப்போது மாணவிகள் தங்களது கல்வி பணியுடன் சமூகப்பணிகளும் செய் வேண்டும். வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமங்களில் வரை படங்கள் வரைந்து கிராம முன்னேற்றம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.