கந்தர்வகோட்டை, ஜூலை 16: கந்தர்வகோட்டை அருகே அடுத்தடுத்த வீடுகளில் தொடர் திருட்டில் நகை, பணம், பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், அரவம்பட்டி கிராமம், காளியம்மன் கோயில் தெருவில் உள்ள அடுத்தடுத்த வீடுகளில் பின்புற கதவுகள் மற்றும் ஜன்னல்களை உடைத்து வீட்டில் இருந்த நகை, பணம், வெள்ளி மற்றும் பித்தளை பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அரவம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிவேலு, அரும்பு, பத்மாவதி ஆகியோர் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, தப்பி ஓடிய மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.



