Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து புதுகையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, மே 16: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை காந்திப் பூங்கா அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர். பெனட் அந்தோனிராஜ் தலைமை வகித்தார்.

முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை திவியநாதன், வட்டார காங்கிரஸ் தலைவர் சூர்யா பழனியப்பன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ராஜாமுகமது உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சிபிஐ இயக்குநர் பதவிக் காலத்தை நீட்டியதைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின்விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.