பொன்னமராவதி,அக்15: பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் கடும் வெயில் வாட்டி வந்தது. இப்பகுதியில் வருடந்தோரும் செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் மழை பெய்து நெல்நடவு பணி தீவிரமாக நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் நடவு பணி மிக குறைந்த அளவில் நடைபெற்று வருகின்றது. திருக்களம்பூர், பொன்னமராவதி, கொப்பனாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் என பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. பொன்னமராவதி நகரில் ஒரு சில இடங்களிலும், பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.


