புதுக்கோட்டை, அக்.15: புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்டோபர்- 2026ம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை 16ம்தேதி புதுகை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.
எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள் மற்றும் வேளாண்- உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானியதிட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவலை மாவட்ட கலெக்டர் அருணா,தெரிவித்துள்ளார்


