Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாம்

கறம்பக்குடி, ஜூலை 14: கறம்பக்குடி தாலுகா அலவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா வில் மக்கள் தொகை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 10 வருடங்களுக்கு ஒரு முறை ஒன்றிய அரசின் மூலம் நடத்தபடும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சில வருடங்களுக்கு பிறகு எடுக்க பட வேண்டும் என்ற அடிப்படையில் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

கறம்பக்குடி தாசில்தார் பிரவீனா மேரி கலந்து கொண்டு தலைமை வகித்து பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பில் கறம்பக்குடி தாலுகா மற்றும் வட்டார மையத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கணக்கெடுப்பாளர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எவ்வாறு செயல்பட வேண்டும்.

என கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வை யாளர்களுக்கு தாசில்தார் அறிவுறுத்தி ஆலோசனை வழங்கினார்.  இந்த பயிற்சி முகாமில் தாலுகா தேர்தல் துணை தாசில்தார் ஸ்டெல்லா, வருவாய் ஆய்வாளர் முருகேசன், மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி யாளர்கள் சீனிவாசன், இளங்கோவன், ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.