Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

இருங்களூர் புனித லூர்து மாதா ஆலயத்திருவிழா

கந்தர்வகோட்டை, மே 15: மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து இருங்களூர் புனித லூர்து மாதா ஆலயத்திற்கு இளைஞர்கள் சுடர் எடுத்து சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் ஊராட்சியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் மேட்டு இருங்களூர் புனித லூர்துமாதா ஆலய திருவிழாவிற்கு இளைஞர்கள் தீபசுடர் எடுத்து கொண்டு தொடர் ஓட்டம் சென்றனர்.

இவர்கள் கூறும்போது 15ம் தேதி மற்றும் 16ம் தேதி இருங்களூர் புனித லூர்து மாதா திருவிழாவிற்கு மங்கனூர் புனித செபஸ்தியர் ஆலயத்தில் இருந்து தீபசுடர் எடுத்து கொண்டு தொடர் ஓட்டமாக சென்று திருவிழா தொடங்கும் என்று கூறுகிறார்கள். இந்த ஆலய ஐதிகம் என்பது திருவிழா தொடங்க புகழ்பெற்ற சர்ச்களில் சுடர் எடுத்து செல்லுவது வழக்கம் என்று கூறினார்கள். சுடர் எடுத்து செல்ல ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.